வெளிநாட்டவர்கள் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் இனி வானூர்தி நிலையத்தில் பெறலாம்!

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் வானூர்தி நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

அதன்படி ஒரு மாதத்துக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 25 டொலர்களும், மூன்று மாதங்களுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 50 டொலர்களும், 6 மாதங்களுக்கு 75 டொலர்களும், ஒரு வருடத்திற்கு மேலான அனுமதி பத்திரங்களுக்கு 200 டொலர்களும் அறவிடப்படவுள்ளது.

இது வரைகாலமும் அவர்கள் நேரில் சென்று மோட்டார் பதிவு திணைக்களத்தில் தமது வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி இலங்கையில் வாகனம் ஓட்டும் உரிமத்தை பெற வேண்டியிருந்தது.

Related Posts