வெளிநாடுகளில் வாழும் 70,000ற்கும் மேற்பட்டவர்கள் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்துள்ளனர்!

gov_logபோர் நிறைவடைந்ததன் பின்னரான இரண்டாண்டு காலப்பகுதியில், 70,000ற்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

2010ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2012 ஆகஸ்ட் மாதம் வரையில் இவ்வாறு குறித்த வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் வாழ்ந்து வரும் உறவினர் நண்பர்களை பார்வையிடவே அதிகளவானவர்கள் இவ்வாறு விஜயம் செய்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் காணப்பட்ட வீதிச் சோதனை சாவடிகள் மற்றும் வீதித்தடைகள் பாரியளவில் அகற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related Posts