வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களின் வீடுகளில் பணமோசடியில் ஈடுபடுகின்ற நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதிநிதிகள் என்ற போர்வையில் போலி அடையாள அட்டையுடன் சிலர் பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரன்தெனிய தெரிவித்தார்.
வீடுவீடாக சென்று பணம் திரட்டும் நடவடிக்கைகள் எதனையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர்,
காப்புறுதி இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவித்து, குறிப்பிட்ட தொகை பணத்தை மோசடி பேர்வழிகள் சிலர் அறவிடுவதாக பணியகத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இத்தகைய பண மோசடியில் ஈடுபடுகின்ற எவரேனும் வெளிநாட்டு தொழில் புரிவோரின் வீடுகளுக்கு சமூகமளித்தால், அவர்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பணியகத்திற்கோ அறிவிக்குமாறு மங்கல ரன்தெனிய கேட்டுக்கொண்டார்.