வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்கு அவசர அறிவிப்பு!!

மார்ச் 1 தொடக்கம் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, தென்கொரியா மற்றும் ஈரான் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தங்களை பதிவு செய்துகொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யாத நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “நீங்கள் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதியன்றும் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்திருந்தால், உங்களதும் சமூகத்தினதும் நலனுக்காகவும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 மத்திய நிலையத்தில் உடனடியாக பதிவு செய்யுங்கள்.

இந்த உத்தரவிற்கு முரண்பட்ட வகையில் செயற்படுவோருக்கு எதிராக தொற்றுத் தடைக்காப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று அறிவிக்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts