வெல்லப்போவது நல்மக்களின் மந்திரமா! சொக்கனின் தந்திரமா!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற, ஓ.பி.எஸ்., – இடைப்பாடி அணியினர் இடையே, இன்று சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறுகிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண சூழல் குறித்து அவ்வப்போது தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வரும் கமல், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஒரு பதிவை டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் கமல் கூறியிருப்பதாவது…

‛‛இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா, அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்”. என்று கூறியுள்ளார்.

சசிகலா முதல்வராக வரக்கூடாது, பன்னீர் செல்வம் தான் முதல்வாராக தொடர வேண்டும் என்று கமல் வெளிப்படையாக கூறியிருந்தார்.

அதன்படி, கமலின் இந்த பதிவு இடைப்பாடி வரக்கூடாது, மக்களின் நல்நம்பிக்கையான பன்னீர் செல்வமே வர வேண்டும் என்பதற்கான பதிவு தான் இது என கமல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Posts