வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அவர்களில் 210 கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, குறித்த நபருடன் நெருங்கிப் பழகியவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படு வருகின்றனர்.

குறித்த கைதி கந்தக்காட்டிலுள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர் என்பதால், கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்த 474 பேரும் அதன் நிர்வாக அதிகாரிகள் 131 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம், வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 170 கைதிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டவர்களில் 210 பேரின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரா அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts