வெலிஓயாவுக்கு நிதி கொடுப்பதில்லையென பிரேரணை நிறைவேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டரீதியற்ற முறையில் இணைக்கப்பட்டுள்ள வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்கு வடமாகாண சபையில் இருந்து எவ்வித நிதியுதவிகளும் செய்யக்கூடாது என்ற பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

north-provincial-vadakku-npc

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டடத்தொகுதியில் நேற்று (25) இடம்பெற்றது.

இதன்போது, வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் மேற்படி பிரேரணையை கொண்டு வந்தார்.

இந்த பிரேரணைக்கு சபையின் பிரசன்னமாகியிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது.

பிரேரணை சபையின் முன்வைத்து ஜெகநாதன் உரையாற்றுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே 5 பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்ற பட்சத்தில், ஆறாவது பிரதேச சபையாக வெலிஓயா சட்டரீதியற்ற வகையில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படாமல் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிதிகளில் அதிகளவான நிதி வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்கு செல்கின்றது.

அதனால், வடமாகாண சபையால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கொடுக்கும் உதவிகளில் எந்தவொரு நிதியும் வெலிஓயாவுக்கு செல்லக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts