வெற்றுக் காணியிலிருந்து எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

காரணவாய் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி ஒன்றில் இருந்தே சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts