வெற்றிலை பாக்கு கடையில் போலி நாணயத்தாள்கள்

யாழ் நகரில் வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்து ஐயாயிரம் ரூபா போலித்தாள்கள் 2 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ். உப பொலிஸ் பரிசோதகர் அனில் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று இவ்வாறு குறித்த நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கடையில் போலித்தாள்கள் கைமாற்றம் செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் பொலிஸாருக்கு இரகசியத் வழங்கி தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குறித்த கடை உரிமையாளர் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts