வெற்றிலை, கையை தவிர்த்து எந்த விலங்குக்கும் புள்ளடியிடுங்கள்

ஊழல்களில் ஈடுபடும் தனிநபர்களிடமிருந்து எமது நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களைத் தவிர வேறெந்த விலங்குக்கு வேண்டுமென்றாலும் வாக்கயுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.

ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, ஐ.தே.க, ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் இடதுசாரி கட்சிகள் அனைத்தும் கைக்கோர்த்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எம்பிலிபிட்டிய மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளலுள்ள பல இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related Posts