வெற்றிடங்களை நிரப்ப யாழில் நேர்முகத்தேர்வு

முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் 500 வரையான வெற்றிடங்களுக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு பொது மக்கள் தொழில் சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை நிலையமானது தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்காக நாடு முழுவதிலும் கிளைகளைக் கொண்டுள்ள முன்னணி தனியார் கம்பனியிடமிருந்து 500 வரையான தொழில் வெற்றிடங்களைப் பெற்றுள்ளது.

இவ் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு இம்மாதம் (ஒக்டோபர்) 15ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8மணி முதல் மாலை 2 மணிவரை யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது.

ஆகையால் இந்நேர்முகத்தேர்வுக்கு தோற்ற விரும்பும் க.பொ.த. உயர்தரம் மற்றும் க.பொ.த.சாதாரண தரம் வரை கல்வி கற்ற 27 வயதிற்கு மேற்படாத ஆண்களும் 24 வயதிற்கு மேற்படாத பெண்களும் தோற்றலாம்.

நேர்முகத் தேர்விற்கு தோற்ற விரும்புவோர் முக்கியமாக தங்கள் கல்விச் சான்றிதழ்கள்,தேசிய அடையாள அட்டை, பிறப்புச்சான்றி தழ், கிராம அலுவலரின் சான்றிதழ் என்பவற்றோடு அவசிய மான ஏனைய சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்விற்கு தோற்றலாம்.

இவ் அரிய வாய்ப்பினை தவறவிடாது பயன்ப டுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் மேலதிக விளக்கங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை 021 221 9359 இலக்க மாவட்ட பொது வேலைவாய்ப்பு சேவை நிலைய அலுவலக தொலைபேசி ஊடாகவோ அல்லது பொதுமக்கள் தொழில் சேவை நிலையத்தில் நேரடியாகவோ பெற்றுக்கொள்ளலாம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

Related Posts