வெற்றிக் கனியை பறித்தது இலங்கை

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய அந்த அணி 19.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 113 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து 114 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ் 54 ஓட்டங்களை விளாசினார்.

பின்னர் 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை 119 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.

எனவே 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் 1-1 என தற்போது சமப்படுத்தப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான 20 இருபது போட்டி எதிர்வரும் 25ம் திகதி இடம்பெறவுள்ளது.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக மெத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டார்

Related Posts