வெப் கேமிரா மூலம் திருமணம் செய்து கொண்ட மணமகன்!

விடுமுறை கிடைக்காததால் வெப் கேமிரா (web cam) மூலம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் சவுதி அரேபியாவில் வேலை செய்யும் கேரள இளைஞர்.

wedding-759-main

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவர் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் மெக்காவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சாம்லா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் ஹாரிஸ் வேலை செய்யும் நிறுவனத்தில் அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டதால்,தனது திருமணத் தேதியன்று ஹாரிஸ் இந்தியாவுக்கு திரும்ப முடியாத சூழல் இருந்தது.இந்த இக்கட்டான சூழல் குறித்து விவாதித்த இருவீட்டாரும்,ஒரு புதுமையான முடிவை எடுத்தனர்.

அதன்படி தனது திருமணத்தை வெப் கேமிரா மூலமாக ரியாத்திலிருந்து ஹாரிஸ் பார்த்துக் கொள்வது எனவும்,ஹாரிஸுக்கு பதிலாக அவரது தங்கை நஜிதா மணமகளுக்கு தாலி கட்டுவார் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

திட்டமிட்டபடி ஆழப்புழாவில் நடைபெற்ற தனது திருமண நிகழ்வுகளை வெப் கேமிரா மூலமாக ஹாரிஸ் பார்த்துள்ளார்.

மணமகள் சாம்லாவுக்கு,ஹாரிஸின் தங்கை நஜிதா தாலி கட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் மலையாள மக்களின் சூழ்நிலையை புரிந்து கொண்ட இருவீட்டாரின் உறவினர்களும்,மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Related Posts