வெடுக்குநாறிமலை விவகாரம்: கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுதலை!!

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக வடக்கு- கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையில் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சற்று முன்னர் சபையில் தெரிவித்தார்.

Related Posts