வெடி பொருட்களுடன் கைதானவர்கள் பிணையில் விடுதலை

judgement_court_pinaiவெடிபொருட்களுடன் கைதான ஐவரை பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த வருடம் முழங்காவில் பகுதியில் சி-4 ரக வெடிபொருட்களுடன் குருநகர் பகுதியைச் சேர்ந்த 5 பேர் முழங்காவில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கான பிணை விண்ணப்பம் நேற்று யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மேற்படி ஐவரையும் தலா 2 லட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார்.

Related Posts