வெசாக் தினம், வடக்கு முதலமைச்சருக்கும் அழைப்பு

vicknewaran-tnaயுத்தம் முடிவுக்கு பின்னர் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்தில் கொண்டாடப்படும் வெசாக்தினத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடக இணைப்பாளர் மல்லவராட்சி தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். பொதுநூலகத்திற்கு அருகில் வெசாக் வலையம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்விற்கு வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்படும் 5 ஆவது வெசாக் தினம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

யாழில் 800 தமிழ் இளையோரை இராணுவத்தில் இணைக்க திட்டம்

Related Posts