வீழ்ச்சியை நோக்கி இலங்கையின் பணப்பெறுமதி

இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையிலேயே வருடம் ஆரம்பமாகியுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை பாரிய சவாலுக்குட்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டின் பண பெறுமதியானது சுமார் 3.9 விகிதத்தால் பெறுமதி இழந்துள்ளது. இது ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை பெறுமதியாக 150 ரூபா தொடக்கம் 150.75 சதத்தை கொண்டிருந்தது. இது வருட இறுதியில் 151 ரூபாவாக உயர்ந்துள்ளது.

குறித்த பணப் பெறுமதி இழப்பானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச பங்கு பரிவர்தனைகளை சாவாலுக்குட்படுத்தி வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த இரு வாரங்களில் மாத்திரம் சராசரியாக 0.40 சதவிகித வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. குறித்த வீழ்ச்சியானது நாட்டின் கடன் பழுவை அதிகரிப்பதோடு, வட்டி வகிதாசார சரிவுகளையும் ஏற்படுத்தும் என்பது கவனிக்கத்தகு விடயமாகும்.

Related Posts