Ad Widget

வீரர்கள் தவறு செய்தால் எதிரணி வீரர்களுக்கு ஐந்து ஓட்டங்கள்!

கிரிக்கெட்டில் நடுவரின் முடிவுக்கு எதிராகக் கூக்குரலிடுவது, எதிரணி வீரருடன் உடல் ரீதியான தாக்கங்களை விளைவிப்பது போன்ற குற்றங்களுக்காக, எதிரணியினருக்கு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்படும் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதால் புதிய தலைமுறை நடுவர்கள் பலரும் அதிருப்தியினால் பதவியை விட்டு விலகுவதால், நடுவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துடுப்பாட்ட மட்டைகளின் அகலம் 108 மில்லி மீற்றருக்குள்ளும், அடர்த்தி 67 மில்லி மீற்றருக்குள்ளும் இருக்கவேண்டும் என்று புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், தேவைப்பட்டால் அவர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றவும் நடுவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

Related Posts