வீதி புனரமைப்புக்கு 27 மில்லியன் ஒதுக்கீடு: நல்லூர் பிரதேச சபை தவிசாளர்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட 56 வீதிகள் 27 மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.வசந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச சபையின் நிதியில் 2012ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொக்குவில், கோண்டாவில், கல்வியங்காடு, இணுவில மற்றும் திருநெல்வேலி போன்ற பிரதேசங்களிற்கு உட்பட்ட 38 வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதே பகுதியில் அகலம் குறைந்த வீதிகளை அகலம் கூட்டுவதற்காக 4 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் டிசெம்பர் மாத இறுதிக்குள் நிறைவுசெய்ய வேண்டியுள்ளதால் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts