ஏழாலை வடக்கில் வைத்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு தாக்குதலை மேற்கொண்டதுடன் இதனால் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு கொண்டுசென்று விடும் வாகனம் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
8 பேர் கொண்ட கொண்ட குழுவொன்று கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கி வாகனத்தினை சேதமாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரையிலும் எவரும் கைதுசெய்யப்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.