வீதி அகலிப்பு பணிகளையொட்டி மின்விநியோகம் தடைப்படும்

யாழ்ப்பாணத்தில் வீதி அகலிப்பு பணிகளை முன்னிட்டு உயரழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளதால் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப்பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை இணுவில், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, தட்டார்தெரு, ஓட்டுமடம், ஆனைக்கோட்டை, நவாலி, கோண்டாவில், கோம்பயன்மணல் பிரதேசம், புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சி ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் தடைப்படும்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை கச்சேரி, அரியாலைப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Posts