வீதியை மறித்து இராணுவத்தினர் தொடர்ந்தும் போராட்டம்

விசேட தேவையுடைய முன்னாள் படையினர் நேற்று முதல் கொழும்பு புறக்கோட்டை வீதியில் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

desable-army-protest-2

தமக்கான ஓய்வூதியத்தை வழங்குமாறு வலியுறுத்தி நேற்று மீள ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் இரவு பகலாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், ஓல்கோட் மாவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, சில வீதிகள் ஒரு வழி போக்குவரத்தாகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த படை வீரர்களின் ஓய்வூதியம் தொடர்பாக கடந்த ஜூலை மாதத்திலும் இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில், அரசாங்கத்தின் வாக்குறுதிக்கமைய பின்னர் கைவிடப்பட்டது. எனினும், கடந்த ஒக்டோபர் மாதம் வரை தமக்கான ஓய்வூதியம் வழங்கப்படாததைத் தொடர்ந்து, கடந்த மாதம் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

எனினும், இதுவரை தமக்கான ஓய்வூதியம் வழங்கப்படவில்லையென தெரிவித்துள்ள விசேட தேவையுடைய படையினர், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கமைய தமது ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க வேண்டுமெனவும், அதுவரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts