வீதியில் துரத்திச்சென்று இளைஞனின் கையை வெட்டிய குழுவினர்

யாழ்ப்பாணம் கோப்பாய் அம்மன் கோவிலுக்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை(08) இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞனின் கை வெட்டப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பகுதியை சேர்ந்த ஏ.அலெக்ஸ்தீபன் (வயது 20) என்பவரே இவ்வாறு கையை இழந்து படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனை வீதியில் துரத்தி சென்ற குழுவினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் இளைஞனின் கையை மணிக்கட்டு பகுதியுடன் வெட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாண மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts