வீட்டுத்திட்ட உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதான குற்றச்சாட்டு பொய்! – இந்திய அரசு

இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தின் போது வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் பெண்களிடம் பாலியல் ரீதியான விருப்பங்களை எதிர்ப்பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் ராஜசபாவில் இந்த விடயம் நேற்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடு அடிப்படையற்றது என்று நேற்று இந்திய பிரதி வெளியுறவு அமைச்சர் வீ.கே.சிங் ராஜ்சபாவில் அறிவித்தார்.

இது தொடர்பான விசாரணை கடந்த ஒக்டோபரில் முடிவடைந்தது. இந்தநிலையில் விசாரணையின் அறிக்கை இலங்கையின் சட்டம் ஒழுங்கு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

Related Posts