வீட்டுத்திட்டங்களை கொண்டுவரும்போது பல்வேறு தடைகள் வருகின்றது: சுவாமிநாதன்

வடக்கு – கிழக்கில் வீட்டுத்திட்டங்களை கொண்டுவரும்போது பல்வேறு எதிர்ப்புக்களும் தடைகளும் வருவதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சரான டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வடக்கு – கிழக்கில் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களை நடைமுறைப்படுத்த தமது அமைச்சிடம் போதியளவு பணம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை தொடர்பில் அவரிடம் இதன்போது வினவப்பட்டது.

குறித்த பிரச்சினை உண்மைதான், அவர்களிற்கு பிரதானமாக காணி பிரச்சினை உள்ளது. அவர்களிற்கு காணி கொள்வனவு செய்தே வீட்டு திட்டங்கள் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களிற்கு வீடுகள் அத்தியாவசியமாக உள்ளது. இந்தியா கட்டி கொடுத்தால் என்ன, சீனா கட்டி கொடுத்தால் என்ன எவ்வாறாயினும் வீடு கிடைத்தால் போதும்“ என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts