வீட்டுக்கு தீ வைத்த வி­ஷமிகள்

உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் வளவினுள் புகுந்த விஷமிகள் வீட்டினைத் தீயிட்டு எரித்துள்ளனர். வீட்டுக்காரர் வெளியே சென்ற நேரம் பார்த்து விஷமிகள் தீ வைத்ததில் வீடு முற்றாக எரிந்ததுடன், உடைமைகளும் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வரணி கரம்பைக்குறிஞ்சி கிழக்கில் இடம்பெற்றது.

இதே இடத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி சத்தியசீலன் என்பவர் வீட்டில் தனித்து வாழ்பவர். நேற்றுமுன்தினம் அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் வளவினுள் புகுந்த விஷமிகள் வீட்டினைத் தீயிட்டு எரித்துள்ளனர்.

அப்போது வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த பல பெறுமதிமிக்க பொருள்களும் எரிந்து நாசமாகின.

காலையில் தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த வீட்டு உரிமையாளர் சம்பவம் தொடர்பாகக் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts