வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும்: இராதாகிருஸ்ணன்

2025 ஆம் ஆண்டில் மலையத்தில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.

லிந்துல்ல பம்பரகல்ல தோட்டம் அப்பர்கிரன்லி பிரிவில் 30 வீடுகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பெருந்தோட்ட மக்களின் வறுமைக்கு காரணம் மக்களிடையே கல்வி அறிவு இன்மையே. இதனால் இன்று கொழும்பு மற்றும் தன வந்தகர்களின் வீடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் என்றதும் மலையகத்தையே நாடுகின்றனர்.

காரணம் இவர்கள் படிக்கவில்லை வீட்டு வேலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் நன்கு படித்து இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா. அதனால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி கல்வியை புகட்டுங்கள்.

அதற்கான வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 13 வருடங்கள் கட்டாய கல்வியாக மாற்றப்பட்டுள்ளது. சாதாரண தரம் சித்தியெய்தாவிட்டாலும் உயர் தரத்தில் தொழில் வாய்ப்புக்கான கல்வியை தொடர முடியும்” என அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

Related Posts