வீட்டுக்குள்ளேயே நிர்வாண போல் நடன கிளப் நடத்தும் கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட் அல்லது சிக்ஸ் என்றாலே நமக்கு விரைவில் ஞாபகம் வரும் வீரர் வெஸ்ட்இண்டீசின் ஜமைக்கா வீரர் கிறிஸ் கெய்ல்தான். இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தொடரில் இவர் பந்துகளை சிக்சராக பறக்க விடுவதை பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும்.

gayle_insta_1

மைதானத்தில் எவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடுகிறாரோ, அதேபோல் எதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் மனிதரும் இவர்தான். எந்தவொரு நேரத்திலும் தனது யதார்த்தத்தையும், சந்தோசத்தையும் விட்டுக்கொடுக்காதவர்.

வாழ்க்கையை ஜாலியாக எடுத்துக்கொள்ளும் இந்த ஜமைக்கா வீரர் தனது வீட்டிற்குள் ஒரு ஸ்ட்ரிப் கிளப் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த கிளப் படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் அரைகுறை ஆடையுடன் அழகிகள் ஆடும் ஸ்ட்ரிப் கம்பி ஒன்று இருக்கிறது. அதன் அருகில் கெய்ல் இருக்கிறார். சிறிது தூரத்தில் முதுகைக் காட்டி அழகி ஒருவர் நிற்கிறார்.

‘‘நீச்சல் குளத்தில் இருந்து ஸ்டிரிப் கிளப் வரை இருக்க வேண்டும். வீட்டில் ஸ்டிரிப் கிளப் இல்லாவிட்டால், அவர்கள் கிரிக்கெட் வீரர் கிடையாது. என்னுடைய வீட்டிற்கு வருபவர்கள் சிறப்பாக பொழுது போக்குவதற்காக நான் இதனை உருவாக்கியுள்ளேன். அவர்கள் தங்கள் வீட்டில் உள்ளதுபோல் உணர்வார்கள். வாழ்க்கை பெரிய கனவோடு வாழ்வதற்கே” என்று அந்த படத்திற்கு விளக்கம் அளித்துள்ளார் கெய்ல்.

gayle_insta_2

Related Posts