கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையால் வெள்ள நீர் மற்றும் குளத்துக்கு மேலால் மேவிப் பாயும் நீர் என்பன மக்கள் குடியிருப்பினூடு பாய்ந்து வருகிறது.
வெள்ள நீருடன் சேர்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்குமுதலை ஒன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்தே இச் சிறுமியை தாக்கியுள்ளது.
கனகலிங்கம் விதுசா என்கிற இச்சிறுமி கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவி எனவும் தெரிய வருகிறது.
இது தொடர்பில் சிறுமியின் அப்பா கருத்து தெரிவிக்கையில், தான் காணும் போது மகளின் தலை முதலையின் வாயில் இருந்ததாகவும் தான் ஓடிச்சென்று சத்தமிட்டவாறு மகளின் தோளைப் பிடித்து இழுத்து காப்பாற்றியதாகவும் மகளின் தலை, உடம்பு, மற்றும் கால்களிலும் காயங்களை ஏற்படுத்தி விட்டதாக கூறினார்.
[otw_shortcode_quote border=”bordered” border_style=”dashed” background_color_class=”otw-greenish-background”]மகளின் தலை முதலையின் வாயில் இருந்ததாகவும் தான் ஓடிச்சென்று சத்தமிட்டவாறு மகளின் தோளைப் பிடித்து இழுத்து காப்பாற்றியதாகவும் மகளின் தலை, உடம்பு, மற்றும் கால்களிலும் காயங்களை ஏற்படுத்தி விட்டதாக கூறினார்.[/otw_shortcode_quote]