வீடு வேண்டாம் நீதி வேண்டும்! சுலக்சனின் தந்தை!

கடந்த மாதம் 20 திகதி  காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் பெற்றோர், பல்கலை மாணவர்கள். உபவேந்தர் மற்றும் பல்கலை விரிவுரையாளர்களை ஆகியோரை சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம்மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் டிஎம் சுவாமிநாதன்  இன்று (21)சந்தித்துள்ளார்.
யாழ் பல்கலைகழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது அவரது முன்னைய சந்திப்புக்களின் போது வாக்குறுதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் வினவப்பட்டது.

sulaxan


இதற்கு பதிலளித்த சுவாமிநாதன் முதலாவதாக அவர்களுக்கு இலவச வீடு கட்டிக்கொடுக்கப்படும் எனவும் நஷ்ட ஈடு வழங்கப்படுவது தொடர்பில பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் தெரிவித்ததுடன் அக்குடும்பத்தினருக்கு தகமைகள் இருக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் வீடுகளை இராணுவத்தினர் கட்டிக்கொடுப்பார்கள் என அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு மறுப்புத் தெரிவித்த உயிரிழந்த மாணவன் சுலக்சனின் தந்தை தாம் வீடோ, காணியோ கோரவில்லை எனவும் தமக்கு நீதியான விசாரணை மற்றும் குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் தெரிவித்தார்.

Related Posts