வீடு திரும்பினார் கடத்தப்பட்ட முன்னாள் பெண் போராளி!

புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நான்கு நபர்களால் கடத்தப்பட்ட முன்னாள் போராளி வீடு திரும்பியுள்ளார்.

சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த புதுக்குடியிருப்பை வதிவிடமாக கொண்ட பெண் போராளியே, முன்பள்ளிக்கு செல்லும் போது நேற்றுமுன்தினம் காலை கடத்தப்பட்டிருந்தார்.

இவர் தற்போது புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கடத்தலுடன் தொடர்புபட்டவர்களும் இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களென கண்டறியப்பட்டுள்ளது.

Related Posts