வீடுகள் இராணுவத்தினரால் இடிக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் இல்லை – அரசாங்க அதிபர்

suntaram-arumainayakam4வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடுகள் இராணுவத்தினரால் இடிக்கப்பட்டதாக இதுவரையில் முறைப்பாடு கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று தெரிவித்தார்.

வலி.வடக்கு பிரதேசத்தில் பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடிக்கப்படுவதாக வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், தெல்லிப்பழை முத்துமாரி அம்மன் ஆலய பகுதியில் 3 வீடுகளும், கீரிமலை பகுதி கடற்படை முகாமிற்கு அருகில் உள்ள வீடுகளும் இராணுவத்தினரால் இடிக்கப்படுவதாக பிரதேச சபை உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் வினவியபோது, ‘வலி.வடக்கு பிரதேசத்தில் தற்போது, வீடுகள் இடிக்கப்படுவதாக பொதுமக்களினால் வலி வடக்கு பிரதேச செயலாளரிடமோ அல்லது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடமோ முறைப்பாடுகள் செய்யவில்லை’ என்று தெரிவித்தார்.

‘தற்போது இராணுவத்தினரால் வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள பொதுமக்களின் வீடுகள் இடிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை. அவ்வாறு பொதுமக்களினால் முறைப்பாடு செய்யப்பட்டால் இவ்விடயம் சம்பந்தமாக ஆராயவுள்ளதாகவும்’ அவர் மேலும் கூறினார்.

Related Posts