வீடுகள் அழிக்கப்பட்டமையை ஆதாரத்துடன் காட்டிய மக்கள்

தங்கள் வீடுகள் 1987ஆம் ஆண்டு இருந்தமையும், தற்போது இருந்த இடமே இல்லாமல் அழிக்கப்பட்டதையும், வலிகாமம் வடக்கு மக்கள் புகைப்பட ஆதாரத்துடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் காட்டினர்.

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்குப் பகுதிகளை முதலமைச்சர், வியாழக்கிழமை (07) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போதே மக்கள் மேற்படி விடயத்தை முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

1987ஆம் ஆண்டு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெயர்ந்து, 1987ஆம் ஆண்டு மீண்டும் வந்து குடியேறியபோது, தங்களின் வீடுகள் சிறிது சேதத்துடன் இருந்தமையை, புகைப்படங்கள் எடுத்து வைத்திருந்தோம். அதன் பின்னர் 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து தற்போது, மீண்டும் வந்து பார்த்த போது, எமது வீடுகள் இருந்த அடையாளங்கூடத் தெரியாமல் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது என மக்கள் கூறினர்.

Related Posts