வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக தற்போது சமூகவலைத்தளங்களில் செய்தியொன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் திட்டம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகள் ஊடாக சமூகவலைத்தளங்களில் இந்த செய்தி தற்போது உலாவருகின்றது.
இதன் உண்மை விபரம் தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார் .
“நாட்டின் பல மாவட்டங்களில் இரவு வேளையில் பொது சுகாதார பரிசோதகர்கள், அவர்களது சீருடையில் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் வீடுகளுக்கு வருவார்கள் யானைக் கால் நோய் தொடர்பில் இரத்த மாதிரிகளை சேகரிப்பதற்கான உரிய பிரதேங்களுக்கு.
இது இலங்கையில் சுகாதார சேவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
எனவே போலியான எச்சரிக்கையை விடுத்து மக்களை அச்சுறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சி இது என்பதால் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் எவருக்காது சந்தேகம் ஏற்படுமாயின் அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை கோரமுடியும்.
எனவே இது போன்ற பொய்யான தகவல்களால் ஏமாற வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவற்துறை ஊடகப் பேச்சாளர் இது தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் தவிர்ந்த வேறு யாராவது இது போன்று வீடுகளுக்கு வந்தால் அருகில் உள்ள காவற்துறைக்கோ, அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அழைத்து அறிவிக்குமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
http://www.e-jaffna.com/archives/82138