வீடுகளுக்கு பூட்டுப் போட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிக்கு வெளிநாட்டிலிருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்தவர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுத்தலை அலட்சியம் செய்து வெளியில் நடமாடுபவர்களின் வீடுகளுக்கு பூட்டுப் போட்டு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகள் காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் நேற்று இரவு பொதுச் சுகாதார அதிகாரிகளினால் ஒருவரின் வீட்டுக்கு பூட்டு போடப்பட்டதுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு காத்தாக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விடுத்த அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து நடமாடியவரின் வீட்டுக்குச் சென்ற பொதுச் சுகாதார பரிசோதரகள் நகர சபை ஊழியர்கள் குறித்த நபரை வீட்டினுள் வைத்து வீட்டு நுழைவாயிலை மூடி அதற்கு பூட்டுப் போட்டதுடன் வீட்டுச் சுவரில் பதாதை ஒன்றையும் தொங்க விட்டனர்.

Related Posts