வீடுகளுக்குள் புகுந்து தாலிக்கொடி களவில் ஈடுபட்ட இருவர் கைது

arrest_1யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடிப் பகுதியிலுள்ள வீடுகளில் தாலிக் கொடி களவில் ஈடுபட்ட இருவரை யாழ். பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியில் செல்லும் வேளை குறித்த இருவரும் வீடுகளுக்குள் உள்நுழைந்து வீட்டிலுள்ள தாலிக் கொடிகளை களவாடிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து, இருவர் இன்று கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Related Posts