உருத்திரகுமாரன் செயல்முனைப்பில் ஒன்றுபட்டு தமிழீழம் அமைய பாடுபடவேண்டும்

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செயல்முனைப்பில் ஒன்றுபட்டு தமிழீழம் அமைய பாடுபடவேண்டும் என்று தமிழக திரைநட்சத்திரம் சத்யராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற இருக்கின்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டு எழுச்சி நிகழ்வுக்கு வழங்கியிருந்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

sathiyaraj-raj

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தனக்கு மின்னஞ்சல் மூலமாக கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்ததாக தெரிவித்துள்ள சத்யராஜ் அவர்கள், தமிழீழம் அமைய இனிவரும் காலங்களில் உலகத் தமிழர்கள் அனைவரும் எப்படிச் செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் மிகச்சிறப்பாக ஆழமாக சிந்தித்து அக்கடிதம் வரையப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அது மிகவும் சிறப்பாக நடைமுறைச் சாத்தியமாக படுகின்றது எனத் தெரிவித்துள்ள நடிகர் சத்யராஜ் அவர்கள், அந்தவழியில் பயணித்து தமிழீழம் அமைய நாம் அனைவரும் பாடுபடவேண்டும் வேண்டுகின்றேன் எனத் அறைகூவல் விடுத்துள்ளார்.

Related Posts