விஸ்வரூபம்-2 ரிலிஸ் தேதி வெளிவந்தது!

தனுஷை வைத்து ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே படம் பற்றிய எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற கொலவெறி பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது.

linga-rajini

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் ‘வை ராஜா வை’. இப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் டாப்சி, டேனியல் பாலாஜி, மனோபாலா, விவேக் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வேல் ராஜ் ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில், இப்படத்தை பிரத்யேகமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு போட்டு காண்பித்துள்ளார். இப்படத்தை ரஜினி மிகவும் ரசித்து பார்த்ததாகவும் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் கூறியதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் கூறியுள்ளார்.

தற்போது ரஜினியை வைத்து ஐஸ்வர்யா தனுஷ் படம் இயக்கப்போவதாக செய்திகள் பரவி வருகின்றது.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஐஸ்வர்யா, “எனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தபோது, சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்கும் அளவுக்கு எனக்கு போதிய அனுபவம் இல்லை. எந்த இயக்குனராக இருந்தாலும், அவரது படத்தை இயக்குவது கனவாக இருக்கும். அந்த வகையில், எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு கிடைத்த பாக்கியம்” என்றார்.

Related Posts