விஸ்வரூபம்-2 பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல்

கமல் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என உருவான ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர்.

ஆனால், ஒருசில காரணங்களால் படம் இன்னும் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னோட்டமாக ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன்படி விஸ்வரூபம் 2 படத்தின் 3 மொழிகளில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிப்பதாக தெரிவித்துள்ளார் கமல்.

விஸ்வரூபம் படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டாம் பாகத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

Related Posts