விஸ்வரூபம் 2ன் பெரிய தடைகள் நீங்கவிட்டன:கமல்

விஸ்வரூபம் 2 படம் எப்பொழுது தான் வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் கமல் ஹாஸன்

உலக நாயகன் கமல் ஹாஸன், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த விஸ்வரூபம் படம் படாதபாடு பட்டு ரிலீஸானது. நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று விஸ்வரூபம் ரிலீஸ் பிரச்சனை நடந்தபோது கமல் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் விஸ்வரூபம் 2 பட வேலைகளை துவங்கினார்.

தமிழக அரசியல் சூழல் குறித்து கமல் ஹாஸன் தினமும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இதை பார்த்த அவரது ரசிகர்கள், ஆண்டவரே விஸ்வரூபம் 2 எப்பொழுது ரிலீஸாகும் என்று ஓயாமல் கேட்டு வந்தனர்.

ரசிகர்கள் தொடர்ந்து விஸ்வரூபம் 2 பற்றி கேட்டு வந்த நிலையில் கமல் அது குறித்து ட்வீட்டியுள்ளார். கமல் சார், நீங்க அரசியல் பற்றி ட்வீட்டுவதை பார்த்தால் விஸ்வரூபம் 2 டெல்லியில் தான் ஆகும் போல என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

விஸ்வரூபம் 2 படத்தை எதிர்பார்க்கும் அனைவருக்கும். பிரச்சனையை சரி செய்ய நானே களமிறங்கியுள்ளேன். பெரிய தடைகள் நீங்கிவிட்டன. தொழில்நுட்பம் மற்றும் சட்டம் மட்டும் தான் உள்ளது என ட்வீட்டியுள்ளார் கமல்.

என்னையும், என் குழுவையும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும். போஸ்ட்டுக்கு 6 மாதங்கள் ஆகும் என்று ட்விட்டரில் கூறியுள்ளார் கமல்.

Related Posts