விஷால் மீது சரத்குமார் தரப்பினர் தாக்குதல் – தேர்தலில் பரபரப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், விஷால் மீது எதிர் அணியினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vishal-sarath-kumar

விஷால் மீதான தாக்குதல் குறித்து நடிகை சங்கீதா கூறியதாவது,

வாக்குசீட்டுகளை என் கையில் இருந்து சரத்குமார் அணியை சேர்ந்தவர்கள் புடுங்கி சென்றனர். 3 நபர்கள் சரத்குமார் பக்கத்திலேயே இருக்கிறார்கள் ஒருவர் கிச்சா ரமேஷ், சிசர்ஸ் மனோகர், சரத்குமார் உதவியாளர் இவர்கள் மூவருக்கும் இதுதான் வேலை வருபவர்களிடம் வாக்குசீட்டுகளை புடுங்கி செல்வது இதையே செய்து வருகின்றனர்.

நான் வாக்குச்சாவடிக்குள் நுழையும் போது சரத்குமார் என்னிடம் நீ யார் நீ இங்கெல்லாம் வரக்கூடாது உன்னைய யார் இங்க உள்ள விட்டது என்றார். பின்னர் தகாத வார்த்தையில் திட்டினார். ஒரு தலைவனாக இருந்து கொண்டு இவர் தான் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் ஆனால் இவர் மூலமாகவே மக்களுக்கு ஆபத்து வரும் என நாங்கள் நினைக்கவில்லை.

பின் என்னை அடிக்க முயன்றார் அதனை தட்டிகேட்க எங்க ஆளங்க எல்லாம் உடனே வந்துவிட்டார்கள். உடனடியாக விஷால், விக்ரந்த் எல்லோரும் என்னை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். உடனே என் தலைவனை நீ அடிக்க வந்துட்டியா என சரத்குமார் அணியினர் சண்டையை ஆரம்பித்தனர்.

இதை காரணமாக வைத்து விஷாலை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். என் அணி என்று நான் சொல்லவில்லை, இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையிலும் விஷால் அவர்களிடம் கெஞ்சினார். தயவுசெய்து விட்டுவிடுங்கள் நாங்க தப்பாவே இருந்துட்டு போறோம். மன்னிப்பு கோருகிறோம் என்றார் ஆனால் அவரை சரமாரியாக அனைவரும் அடிக்க ஆரம்பித்து விட்டனர். அதில் அவர் மயக்கம் அடைந்தார்.

Related Posts