விஷாலுக்கு வில்லனாக ஜெகபதி பாபு

பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு. இவர் தமிழில் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தில் வில்லனாக நடித்தார். இதில் இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

jagapathi-babu-acting

விஜய்யை தொடர்ந்து அடுத்ததாக விஷாலுடனும் மோத இருக்கிறார் ஜெகபதி பாபு. ‘மருது’ படத்தை முடித்து விட்டு விஷால் அடுத்ததாக ‘கத்தி சண்டை’ படத்தில் நடிக்கிறார். சுராஜ் இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இதில் விஷாலுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஆள் தேடிவந்த நிலையில், தற்போது ஜெகபதி பாபுவை தேர்வு செய்திருக்கிறார்கள்.

மற்ற படங்களில் வரும் வில்லன் போல் இல்லாமல் இந்த படத்தில் ஜெகபதி பாபுவை வித்தியாசமான வில்லனாக காண்பிக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்களாம்.

Related Posts