விஷாலுக்கு எதிராக கூட்டணி அமைத்த கே.பாக்யராஜ் ஆண்ட்ரியா

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மேலும், பிரசன்னா, வினய் ராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கே.பாக்யராஜ் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

இவருடன் இன்னொரு வில்லி வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆண்ட்ரியா நடிக்கப்போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தாலும், தற்போது அவர் வில்லியாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வில்லி என்பதால் இவருக்கு இப்படத்தில் ஆக்சன் காட்சிகளும், பைக் சேசிங் காட்சிகளும் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘துப்பறிவாளன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பொங்கல் தினத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts