நெல்லியடி நச்தைப் பதகுதியில் இயங்கும் பழக்கடைகளில் மருந்து விசிறப்பட்ட பழ வகைகள் விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நெல்லியடிப் பொதுச்சந்தையில் 10 மேற்ப்பட்டடோர் பழ வியாபாரம் செய்து வருகின்றர். தற்போது ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் தமது விற்பனையை அதிகரிக்கு நோக்கில் மருந்து விசிறி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
மருந்து விசிறப்பட்ட பழங்களை விற்பனை செய்ய வேண்டாம் என பிரதேச சபையினரும் பொதுச் சுகாதாரப் பிரிவினரும் தெரிவித்திருந்த போதும், அவர்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு தாம் கொள்வனவு செய்து விற்கப்படும் பழ வகைகளுக்கு சந்தைப் பகுதியில் வைத்ததே மருந்து விசிறுவதனை அவதானிக்க முடிகின்றது.
எனவே, சம்பந்தப்பட் தரப்பினர் இதனைக் கட்டப் படுத்த டவடிக்கை எடுக்க வேண்டும் என பாவனையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.