விவேகம் என பெயர் வைக்கப்பட்டது ஏன்?

வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, அஜித்தை வைத்து மூன்றாவது முறையாக இயக்கும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அஜித்தின் சிக்ஸ் பேக்கை பார்த்து அவருடைய ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து விவேகம் படத்தில் அஜித்தின் கெட்டப்பை வெளிப்படுத்துவது போல் புகைப்படங்கள் வெளியானது.

இந்நிலையில் விவேகம் படம் பற்றி தொடர்ந்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி அன்று விவேகம் படம் திரைக்கு வரும் என்றும், அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று டீஸர் அல்லது ட்ரைலர் வெளிவரும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அது மட்டுமல்ல, விவேகம் என்று தலைப்பு வைக்கப்பட்டதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது. விவேகம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் விவேக். அதனால்தான் படத்துக்கு விவேகம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு விவேகம் படத்தின் தீம் மியூசிக் பெரிதும் பேசப்படும் என்று அனிருத் கூறி வருகிறார்.

Related Posts