விவேகத்தில் அக் ஷராவுக்கு என்ன வேலை?

அக்கா ஸ்ருதி, மூன்று மொழிகளில் பிசியான நடிகையாக உருவெடுத்து விட்டாலும், தங்கை அக் ஷராவுக்கு, இன்னும், தன் திறமையை காட்டும் வகையிலான வாய்ப்பு கிடைக்கவில்லை.

அஜித்தின் விவேகம் படத்தில், காஜல் அகர்வாலுடன் அக் ஷராவும் நடித்து வருகிறார். இதில், அக் ஷரா ஹீரோயின் இல்லையாம். வில்லன்களால் கடத்தப்பட்ட பெண்ணாக அக் ஷரா நடிக்கிறார்.

அவரை கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித் நடிக்கிறார்.

இந்த படம் வெளிவந்த பின், தனக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் தேடி வரும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார் அக் ஷரா.

Related Posts