விவசாய வர்த்தக நிலையத்துக்கு எதிராக நடவடிக்கை

பாவனையாளர்கள் நலன் பேணாத, புத்தூர் பகுதியிலுள்ள விவசாய வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரம் வசந்தசேகரம் தெரிவித்தார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து, குறித்த நிலையம்,சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, காலாவதியான விவசாய பொருட்கள் பல, விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்தே, அந்த வர்த்தக நிலையத்தின் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக, இணைப்பதிகாரி மேலும் கூறினார்.

Related Posts