விவசாயப் பயிற்சி நெறிக்கான நேர்முகப்பரீட்சை

EXAMவட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினால் மருதனார் மடத்தில் நடத்தப்படும் நான்கு மாத விவசாயப் பயிற்சிநெறிக்கான நேர்முகப்பரிட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சி நெறியில் ஆண், பெண் இருபாலரும் இணைத்துக்கொள்ளவுள்ளனர்.

பயிற்சி நெறியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் க.பொ.த சாதாரணத்தில் விஞ்ஞானம் அல்லது விவசாய விஞ்ஞானத்தில் சித்தி அடைந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகப்பரீட்சையில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கிராம அலுவலர் உட்பட மற்றும் இருவரின் நற்சான்றிதழ்கள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், கல்வித்தகமைச் சான்றிதழ்களுடன் நேர்முகப் பரீட்சைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை காலை சமூகமளிக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.

Related Posts