விழிப்புநிலையில் இருக்கிறதாம் பாதுகாப்பு அமைச்சு

வடக்கில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்க, பாதுகாப்பு அமைச்சு முழு அளவிலான விழிப்பு நிலையில் இருக்கும் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு. அரசியலமைப்பின் படி, நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு அமைப்புத் தொடர்பான நிகழ்வுகளையும் நடத்த அனுமதிக்க முடியாது.
வடக்கில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்க, பாதுகாப்பு அமைச்சு முழு அளவிலான விழிப்பு நிலையில் இருக்கும்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, அனைத்துலக தரநியமங்களுக்கு ஏற்ற வகையில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் அனைத்துலக நியமங்களுக்கேற்றதாக இருக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts