விளையாட்டு செயலிகள் மூலம் கொள்ளை!!

இணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார்.

இணையத்தளங்கள் ஊடாக சூது போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் இளைஞர்கள் பல இலட்ச ரூபாய்க்களை முதலீடு செய்து அவற்றை இழந்து வருகின்றனர்.

விளையாட்டின் அறிமுகத்தின் போது சிறு தொகைகளை கட்டி , விளையாட்டில் ஈடுபட்டு வென்றால் , அவர்களுக்கு பணம் கிடைக்கும். பின்னர் ஒவ்வொரு படி நிலைகளை தாண்டும் போது , ஒவ்வொரு தொகை கட்டி , விளையாட வேண்டும். அதில் வெல்லும் போது மேலும் பணம் கிடைக்கும்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பண மோசடிகள், காசோலை மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் கிடைக்கின்றன. அத்துடன் பாரிய கடன்களால் தமது உயிர்களை மாய்ப்பவர்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்தன.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டால் மாத்திரமே இவ்வாறான பண மோசடிகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts